ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

லஞ்சம் பெறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க- சிலாங்கூர் சுல்தான்- பரிந்துரை

ஷா ஆலம், ஜன 8- ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அச்செயல்களைப் புரிவோருக்கு அரசாங்கம் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று நேற்று வெள்ளிக்கிழமை சமய உரையின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தாம் உடன்படுவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தும் பட்சத்தில் சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஊழலில் ஈடுபடுவதற்கே அஞ்சுவார்கள் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

ஊழல் மிகவும் ஆபத்தானது என்பதோடு பெரும் பாவச்செயலாகவும் கருதப்படுகிறது. இது சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதோடு அரசு நிர்வாகத்தையும் நிலையற்றதாக ஆக்கி விடும் என்றார் அவர்.

நீதித் துறை, நிலம், வரி, ஸக்கத் மற்றும் அனைத்து நிலைகளிலும் ஊழல் நிலவுகிறது. அதோடு மட்டுமின்றி சமயம் மற்றும் சார்ந்தவர்கள் மத்தியிலும் இந்த போக்கு காணப்படுகிறது என்று சிலாங்கூர் அரச அலுவலக பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 


Pengarang :