ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மாற்றுத் திறனாளிகள் மருத்துவமனை செல்ல இலவச பயணச் சேவை- எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 13- மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டையை வைத்திருப்போர் மற்றும் மூத்த குடிமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதற்கான இலவச போக்குவரத்து சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது.

ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுங்கை பூலோ ஆகிய பகுதிகளில் உள்ள எட்டு அரசாங்க மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு இந்த சேவை வழங்கப்படுவதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட் வேன்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு புரோட்டோன் எக்சோரா காரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரி அகமது கூறினார்.

சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு ஏதுவாக லிப்ட் வசதி இந்த வேனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு நோயாளிகள் மற்றும் ஒட்டுநர் உள்பட மூவர் மட்டுமே பயணிக்கும் வசதி கொண்ட இந்த வேனில் சக்கர நாற்காலிகள் நகராமலிருப்பதற்காக வார்ப் பட்டைகளும் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

 இச்சேவையைப் பெற விரும்புவோர் 03-55222732 அல்லது 03-55105133 இணைப்பு 1381 என்ற எண்களில் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறையின் சமூக நலப் பிரிவை தொடர்பு கொள்ளும்படி ஷாரின் கேட்டுக் கொண்டார்.

கீழ்க்கண்ட மருத்துவமனைகளுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.

  1. ஷா ஆலம் மருத்துவமனை
  2. ஷா ஆலம் செக்சன் 7 சுகாதார மையம்
  3. ஷா ஆலம், செக்சன் 19 சுகாதார மையம்
  4. கிள்ளான், புக்கிட் கூடா சுகாதார மையம்
  5. கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை
  6. சுங்கை பூலோ பெரிய மருத்துவமனை
  7. சுங்கை பூலோ சுகாதார மையம்
  8. பெட்டாலிங் ஜெயா மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்

Pengarang :