ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 795 காவல் துறையினருக்கு நிதியுதவி

ஷா ஆலம், ஜன 13- கடந்த மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 795 போலீஸ்காரர்கள் 427,200 வெள்ளியை உதவி நிதியாகப் பெற்றனர்.

இத்தொகையில் 379,500 வெள்ளி சிலாங்கூர் மாநில சமூக நல மற்றும் விளையாட்டு நிதியகம் வாயிலாகவும் எஞ்சியத் தொகை பெர்கெப் எனப்படும் போலீஸ் குடும்ப சங்கம் மற்றும் இதர தரப்பினர் மூலமாகவும் பெறப்பட்டது.

வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான உயர் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகள் மற்றும் பொது அதிகாரிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் போலீஸ்காரர்களும் விதிவிலக்கல்ல. நாங்கள் வழங்கும் இந்த உதவித் தொகை அவர்களின் சுமையைக் குறைப்பதில் ஓரளவு துணை புரியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 


Pengarang :