ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கடுமையான எஸ்.ஒ.பி. விதிகளுக்கு மத்தியில் களைகட்டும் பொங்கல், தைப்பூசக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், ஜன 13- தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் வரும் வெள்ளிக் கிழமையும் தைப்பூச விழா வரும் 18ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ள நிலையில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிகளுக்கு மத்தியில் விழாக்களுக்கான முன்னேற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

இங்குள்ள பிரீக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் பொங்கல் பானைகள், பால் கரும்பு, மஞ்சள் அகிய பொருள்களையும் தைப்பூசத்திற்காக மஞ்சள் நிற ஆடைகளையும் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்விரு பெருநாள்களையும் முன்னிட்டு பூக்களுக்கு குறிப்பாக மாலைகளுக்கு பொதுமக்களிடமிருந்து அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக பூ வியாபாரியான எம். விசாகாமா (வயது 34) கூறினார்.

தைப்பூசம் மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு மாலைகளுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் மற்றும் தைப்பூச விழாவின் போது பசும் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பால் வியாபாரியான ஆர். தனேன் (27) தெரிவித்தார்.

இவ்விரு பெருநாள்களும் ஒரே மாதத்தில் வருவதால் இம்முறை பாலுக்கான தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

இதனிடையே தைப் பொங்கல் குறித்து விளக்கமளித்த மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் பொங்கல் வைப்பதற்கான சரியான  நேரம் காலை 7.30 மணி 10.25 வரையிலும் மாலையில் 6.3 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆகும் என்று சொன்னார்.

எனினும் பொங்லிடும் நிகழ்வை காலையில மேற்கொள்வது உசிதமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :