ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்து தீகாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 14– அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பத்து தீகா தொகுதியைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு வார இறுதியில் உதவிப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

அவர்களுக்கு சமையல் அடுப்புகள், ரைஸ் குக்கர், மின்சார கேத்தல், மெத்தை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படவுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

ஓ,சி.பி.சி.அல்-அமின் வங்கி, கிள்ளான் லயன்ஸ் கிளப், சிலாங்கூர் லையன்ஸ் கிளப், ஆகிய தரப்பினர் வழங்கிய இப்பொருள்கள் கம்போங் பாடாங் ஜாவா மற்றும் கம்போங் ஜாவா மக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பொருள்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படும் எனக் கூறிய அவர், வெள்ளத்தால் உடைமைகளை இழந்தவர்களின் சுமையை இந்த உதவி ஓரளவு குறைக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, எரிவாயு கலங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கி உதவுமாறு தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை ரோட்சியா முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தார்.

 

வெள்ளம் வடிந்த வீடு திரும்பியவர்கள் மறுபடியும் இயல்பு வாழ்கைக்கு திரும்புவதற்கு இந்த உதவிப் பொருள்கள் அவசியம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Pengarang :