ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கில் நான்கு தடுப்பூசி மையங்கள்- நாளை முதல் செயல்படும்

ஷா ஆலம், ஜன 14- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்களை சுகாதார அமைச்சு நாளை தொடங்கி  செயல்படுத்தவுள்ளது.

கோலாலம்பூர் உலக வாணாக மையம், புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா, ஷா ஆலம், ஐ.டிசி.சி. மையம், கிள்ளான் கோக்கா காக்காய் ஆகியவையே அந்த நான்கு மையங்களாகும்.

பொது மக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதை விரைவுபடுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இம்மையங்கள் காலை 9.00 மணி முதல் செயல்படும் என்று சுகாதார அமைச்சு தனது முகநூல் வாயிலாக வெளியிட்ட விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கான தேதியைப் பெற்றவர்கள் குறிப்பிட்ட நாளில் தவறாது வரவேண்டும் என்பதோடு      தடுப்பூசி மையத்தில் இருக்கும் போது எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் அது வலியுறுத்தியது.

பொது மக்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஊக்கத் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவு படுத்துவதற்காக ஒருங்கிணைந்த   தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுவதாக சுகாதார   அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்னதாக கூறியிருந்தார்

Pengarang :