ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் சேர்ந்த குப்பைகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் அகற்ற பொதுமக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 14- தங்கள் வீடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொருள்களை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அகற்றி விடும்படி மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுபேற்றுள்ள கும்பலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதற்கு  பொதுமக்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

இன்னும் பலர் தங்கள் வீடுகளில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேசை, நாற்காலி போன்ற பொருள்களை அப்புறப்படுத்தாமல் உள்ளனர். காரணம் கடந்த 8 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி தொடங்கப்பட்டு விட்டது என்றார் அவர்.

துப்புரவுப் பணிகளை சீராக மேற்கொள்வது கால்வாய்கள் மற்றும் நீரோடைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை சீராக மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 7 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வெள்ளத்தில் குவிந்த சுமார் 78,00 டன் குப்பைகளை பல்வேறு தரப்பினரின் துணையோடு இந்நிறுவனம் அகற்றியுள்ளது.


Pengarang :