ECONOMYHEADERADHEALTHNATIONALPBT

மந்திரி புசாரின் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

ஷா ஆலம், 14 ஜனவரி: டத்தோ மந்திரி புசார் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு தனது பொங்கல் தின வாழ்த்துகளில் மக்கள் மற்றும் மாநிலத்தின் வெற்றி தொடர்ந்து மேம்படும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

பொங்கல் நாள் அறுவடைக் காலத்தைக் கொண்டாடுவதாகவும், வெற்றி மற்றும் செழிப்பை மிகுதியாகக் கொண்டாடும் நன்றி உணர்வை குறிக்கிறது என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“கடந்த ஆண்டு நாங்கள் பல்வேறு சவால்களுடன் சோதிக்கப் பட்டோம். உயர் கோவிட்-19 தொற்று மற்றும் வெள்ளப் பேரழிவு மக்கள் மற்றும் மாநிலத்திற்கு ஏற்படுத்திய பின்னடைவு மற்றும் சோதனைகள், நமது மன வலிமையை சோதித்துள்ளது.

ஆனால் “தோல்வியை ஒப்புக் கொள்ளாத நம் மக்களின் மன வலிமையால்  சிலாங்கூர் தொடர்ந்து முன்னேறி வலுவாக உள்ளது என்றார் அவர். . இந்த ஆண்டும் சிலாங்கூர் மாநிலமும் மக்களும் தொடர்ந்து  உயரும் என்று நம்புகிறேன்,  அதனால்  இதுவரை அனுபவித்த  செழுமையும்  வெற்றியும்  தொடர்ந்து  உயரம்”என அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.

தமிழ் நாட்காட்டியின் படி,  தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தால் அறுவடைக் காலத்தில்  இந்த விழா கொண்டாடப் படுகிறது.

களிமண் பானை’யில், சீனி, பாலுடன், அவர்கள் வயலில் விளையும் அரிசியை சேர்த்து பொங்குவதை பொங்கல் என்கின்றனர். இது இயற்கைக்கு நன்றி கூறுவது மட்டுமின்றி, அது கடும் உழைப்புக்கு பின்பே, வெற்றி என்பதை, உழைப்பின் மேன்மையை பறைசாற்றுகிறது இவ்விழா.

அதனால், மலேசியாவில், இது ஒரு  பல இன விழாவின்  பகுதியாக கருதப்படுகிறது என்றார் அவர்  தனது வாழ்த்து செய்தியில்


Pengarang :