Mangsa banjir mendaftar untuk menerima sumbangan Yayasan Tzu Chi Malaysia di Sekolah Jenis Kebangsaan (C) Khe Beng Seksyen 32 Shah Alam pada 15 Januari 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

34,215 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 34,215 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேரின் குடும்பத்தினர் தலா 10,000 வெள்ளியைப் பெற்றனர்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் இந்த விபரங்கள்  இடம் பெற்றுள்ளன.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை  3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 11,236 பேரும்,  கிள்ளானில் 7,376 பேரும், உலு லங்காட்டில் 6,846 பேரும், சிப்பாங்கில் 3,966 பேரும், கோம்பாக்கில் 892 பேரும் உலு சிலாங்கூரில் 93 பேரும் சபாக் பெர்ணமில் 35 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழஙகுவதற்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை  வசதிகளை சரி செய்வதற்கும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த நிதி வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000  வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :