ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19  நோய் எதிர்பாற்றலை  ஒமிக்ரோன் உருவாக்குமா? ஆதாரம் இல்லை என்கிறார் அமைச்சர் கைரி

கிள்ளான், ஜன 16- கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றல் குழுமத்தை பெறுவதற்கு ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றினால் ஒருவர் பீடிக்கப்பட வேண்டும் என்று உலகலாவிய சுகாதார ரீதியில் எந்த கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தின் நம்பக்கத்தன்மை இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஒமிக்ரோன், டெல்டா, அல்பா, பேட்டா என எந்த வகை கோவிட்-19 நோய்த் தொற்றாக இருந்தாலும் சரி, அந்நோயை நாம் விரும்பி பெற முயலக்கூடாது. காரணம், அதன் விளைவுகள் குறித்து நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் கோவிட்-19 நோய்த தொற்றின் நீண்ட கால விளைவுகள் பற்றி நமக்கு தெரியாது. டெல்டா வகை தொற்றை விட ஓமிக்ரோன் மிதமான தாக்கத்தை கொண்டுள்ளது. நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதற்காக அத்தொற்றை நாம் ஏன் வலிந்து ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என நம்மில் பலர் நினைக்கக்கூடும். 

ஆயினும் இந்த கருத்து இன்னும் நீரூபிக்கப்படவில்லை. ஒமிக்ரோன் மிதமான தாக்கத்தை கொண்டுள்ளது என்பதற்காக   அந்நோய் நமக்கு தொற்ற வேண்டும் என்று பொருள்படாது. கோவிட்-19 நோய்த் தொற்றை வலிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொது மக்களை வலியுறுத்திய அமைச்சர், ஊக்கத் தடுப்பூசியை தொடர்ந்து பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒமிக்ரோன் வகை தொற்று மனித உடலில் நோய்த் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக கடந்த வியாழக் கிழமையன்று வெளியான செய்தி ஒன்று கூறியிருந்தது.


Pengarang :