Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari berucap sempena program Sambutan Hari Malaysia, Pelancaran Nadi Desa MPKK Kampung Sungai Chincin dan MPKK Gombak Utara di pekarangan Masjid Gombak Utara Batu 8, Gombak pada 16 September 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
ECONOMYNATIONALPENDIDIKAN

நாடி”திட்டத்தில் அதிகமான மகளிர் பஙகேற்க வேண்டும்- மந்திரி புசார்

 ஷா ஆலம், ஜன 17– நாடி எனப்படும் நியாகா டாருள் ஏசான் வர்த்தகத் திட்டத்தில் மேலும் அதிகபான மாளிர் பங்கு பெற வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை தொடக்குவதற்கான மூலதன நிதியைப் பெற்ற  1,476 மகளிருக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் (நாடி) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட மகளிர் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு துணை புரியும் என்று தாம்  நம்புவதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் வாயிலாக அவர்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“நாடி” வர்த்தகத் திட்டத்தின் கீழ் வர்த்தக கடனுதவி வழங்குவதற்கு 60 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். எளிதாக,விரைவாக மற்றும் சுமையில்லாத வகையில் மகளிர் வர்த்தகம் புரிய இந்த “நாடி” திட்டம் வகை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் இந்த “நாடி” வர்த்தக கடனுதவித் திட்டத்தில் இன வேறுபாடின்றி அனைத்து மகளிரும் பங்கு கொள்ளலாம்.

ஆர்வமுள்ளோர் http://www.hijrahselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது சிலாங்கூரிலுள்ள 20 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள கடனளிப்பு அதிகாரிகள் மூலம் விண்ணப்பம் செய்யலாம்


Pengarang :