ECONOMYNATIONALPBTPENDIDIKANSELANGOR

வசதி குறைந்த 300 மாணவர்களுக்கு ரொக்கத் தொகை பகிர்ந்தளிப்பு

கோல சிலாங்கூர், ஜன 23- மீண்டும் பள்ளிச் செல்வோம் திட்டத்தின் கீழ் புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த 300 வசதி குறைந்த மாணவர்கள் 100 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்.

எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படும் இந்த உதவி குறைந்த வருமானம் பெறுவோர் தங்களை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஏற்படக்கூடிய சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

முந்தை ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு சில கடைகளை தேர்வு செய்திருந்தோம். ஆனால் இம்முறை சுதந்திரமாக செலவு செய்தவற்கு ஏதுவாக அவர்களுக்கு ரொக்கமாக பணத்தை வழங்குகிறோம் என்றார் அவர்.

இந்த உதவித் திட்டத்திற்கு தகுதியானவர்கள் கிராமத் தலைவர்கள், பெங்குளு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அடையாளம் காணப்படுகின்றனர். தகுதியானவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தகுதி உள்ள 400 மாணவர்களுக்கு தாவாஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் புத்தக பைகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜூவாய்ரியா தெரிவித்தார்.

மேலும், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவுக் கூடைகள் மற்றம் ரொக்கப் பணத்தை வழங்கவிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :