ECONOMYMEDIA STATEMENTNATIONAL

41 லட்சம் சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி- சுகாதார அமைச்சு இலக்கு

ஷா ஆலம், ஜன 23- நாட்டில் உள்ள 41 லட்சம்  சிறார்களை
கோவிட்-19 அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு  இலக்கு நிர்ணயித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் பெற்றோர்கள் விடுமுறையைக் கழிக்கவும்  மாநில எல்லைகளைக் கடக்கவும் அனுமதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலிஹகூறினார்.

 சிறார்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும் அவர்களில் சிலருக்கு நோய்க்கான அறிகுறி தென்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

ஜனவரி 2020 முதல் நேற்று வரையிலான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 579,000 இளைஞர்கள் மற்றும் சிறார்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 299,000 பேர் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள்.

அந்த எண்ணிக்கையில் 18 வயதுக்குட்பட்ட 144 பதின்ம வயதினர் நோய்த் தொற்றினால்  இறந்துள்ளனர். அவர்களில் 33 பேர் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர்  குறிப்பிட்டார்.

ஐந்து முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை வரும் பிப்ரவரியில் இருந்து அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.

Pengarang :