ALAM SEKITAR & CUACANATIONALPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,525 குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்களை எம்.பி.எஸ்.ஏ. வழங்கியது

ஷா ஆலம், ஜன 23- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,525 பேருக்கு மாநகர் மன்றம் பல்வகை பயன்களுக்கு உகந்த சமையல் பாத்திரங்களை வழங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் 635 பேருக்கும் பாடாங் ஜாவாவில் 400 பேருக்கும் கம்போங் புக்கிட் லஞ்சோங்கில் 240 பேருக்கும் கம்போங் கெபுன் பூங்காவில் 250 பேருக்கும் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இப்பொருள்களை ஷா ஆலம் டத்தோ பண்டார் ஜமானி அகமது மன்சோர் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் சென்று ஒப்படைத்ததாக ஷாரின் தெரிவித்தார்.

இந்த உதவிப் பொருள்களை ஒப்படைக்கும் போது டத்தோ பண்டார் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடியதோடு அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்ததார் என அவர் மேலும் சொன்னார்.

 உலு லங்காட், சுபாங் ஜெயா தவிர்த்து ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குட்பட்ட பகுதிகளும் வெள்ளத்தில் கடுமையாகப் பாதிப்படைந்தன. 


Pengarang :