ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

வெள்ளத்தை சமாளிக்கும் வழிமுறைகள் மார்ச் மாதம் அறிவிக்கப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 24- வெள்ளத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசு வரும் மார்ச் மாதம் அறிவிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் மதிப்பீடு செய்யப்பட்டப் பின்னர் வரும் மார்ச் மாதம் கூடும் சட்டமன்றக் கூட்டத்தில் வெள்ளத் தடுப்பு  வழிமுறைகள் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அதிகப்பட்ச மழை பெய்யும் சமயங்களில் நீரை விரைந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக சிறந்த வடிகால் முறையை தயார் செய்யும் நீண்ட காலத் திட்டம் இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஒன்று கூடல் நிகழ்வில் இந்த திட்டப் பரிந்துரை முன்வைக்கப்படும். அதில் ஒரு பகுதி மார்ச் மாதம் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உதவுவதிலும் மாநில அரசு கவனம் செலுத்தவுள்ளதாக அமிருடின் மேலும் தெரிவித்தார்.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி வழங்கும் நிகழ்வு மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கான உதவித் திட்டம் முடிவுக்கு வந்தப்பின்னர் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :