ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் அலை தொடங்கியது : நோய்த் தொற்று பரவலை தடுப்பூசி கட்டுப்படுத்தும்.- கைரி

கோலாலம்பூர், ஜன 27- நாட்டில் ஒமிக்ரோன் திரிபு அலை தொடங்கி விட்டதால் மலேசியர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். எனினும், தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக மேற்கொள்வதன் மூலம அந்நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் சுகாதார முறை முழு தயார் நிலையில் உள்ளது. கடுமையான பாதிப்புகள் குறைவாக உள்ளன. இந்த நோய்த் தொற்று அலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, நோய்த் தொற்றுக்கு எதிராக சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் முன்னேற்பாடுகளில் பொது சுகாதாரத் திட்டங்கள் மற்றும் தொடர்சியான சுயப் பரிசோதனை ஆகியவையும் அடங்கும் என்றார்.

இத்தகைய நடவடிக்கைளின் வாயிலாக நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்


Pengarang :