ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சொத்துடைமை நிறுவன ஏற்பாட்டில் 119  மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 27- சிலாங்கூர் சொத்துடைமை நிறுவனத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 16, ஸ்ரீ செம்பாக்கா கவுன்சில் ஹோம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 119 மாணவர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பிங்கிசான் மெஸ்ரா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் அம்மாணவர்களுக்கு 70 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்  கூறினார்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் பயனுள்ள பிரஜைகளாக மற்றும் பெற்றோர்களுக்கு பெருமை தருபவர்களாகத் திகழ்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக ரோட்சியா சொன்னார்.

இதே போன்ற உதவித் திட்டம் மேலும் மூன்று பிபிஆர் எனப்படும் மக்கள் குடியிருப்புத் திட்டவாசிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிள்ளைகள் நமது விலைமதிக்க முடியாத சொத்துகளாக விளங்குவதால் அவர்களின் மன மற்றும் உடலாரோக்கியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும்படி பெற்றோர்களை பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டர்.

குழந்தை வளர்ப்பில் கல்விக்கு மட்டுமின்றி அவர்களின் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.


Pengarang :