MEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூரில் நாளை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

ஷா ஆலம், ஜன 27- சிலாங்கூர் உள்பட தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை மாநிலங்களில் நாளை தொடங்கி மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக், கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் இந்நிலை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

மேற்கு சபா, சரவா மாநிலத்தின் வட மற்றும் மத்திய பகுதிகளில் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இதோ மாதிரியான வானிலை காணப்படும். அதே சமயம் தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வானிலை வறட்சியாகவும் மற்றும் வெப்பமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பலவான் தீவின் மேற்கில்  24 மணி நேரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வெப்ப மண்டல சூறாவளியாக உருவாகாமல் நாட்டை விட்டு விலகி வட மேற்கு கரை நோக்கி நகரும் என்பதை வானிலை ஆய்வுத் துறையின் ஆய்வுகள் காட்டுகின்றன.

வானிலை தொடர்பான சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெற www.met.gov.my  என்ற அகப்பக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியை பதிவிறக்கம் செய்து அறிந்து  கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Pengarang :