ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

8 நாடுகள் கலந்துக்கொள்ளும் ஆசிய பூப்பந்து போட்டியை சிலாங்கூர் நடத்துகிறது

சுபாங் ஜெயா, ஜனவரி 28: முதல் முறையாக, சிலாங்கூர் ஆசிய அணி பூப்பந்து சாம்பியன்ஷிப் (BATC) 2022 ஐ நடத்துகிறது, இது பிப்ரவரி 15 முதல் 20 வரை ஷா ஆலமில் உள்ள சித்தியா சிட்டி கொன்வென்சென் மையத்தில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில், பூப்பந்து ஆசியா மற்றும் மலேசியாவின் பூப்பந்து அசோசியேஷன் (பிஏஎம்) ஆகியவற்றுடன் இணைந்து இந்த மதிப்புமிக்க போட்டியை  ஏற்பாடு செய்துள்ளதாக  ஸ்போர்ட்ஸ் எக்ஸ்கோ முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருதின் ஷாரி அறிமுகப்படுத்தியுள்ள  சிலாங்கூர் பாங்கிட்டின் (சிலாங்கூர் எழுச்சி) கருப்பொருளுக்கு ஏற்ப  சிலாங்கூர் உபசரணையாளராக  இருக்க தயாராக உள்ளது 

மலேசிய விளையாட்டுகள் (சுக்மா) மற்றும் பல்வேறு விளையாட்டுகளின் நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு, விளையாட்டுத் துறை மீண்டு வருவதை உறுதிசெய்ய BAM மற்றும் பூப்பந்து ஆசியாவுடன் இணைந்து பணியாற்ற  துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கொரியா, இந்தியா, தாய்லாந்து, ஹாங்காங், கஜகஸ்தான் மற்றும் மலேசியா உட்பட எட்டு நாடுகள் இதுவரை தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளதாக முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

அது தவிர, விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கும் பின்னர் போட்டி நடைபெறும் இடத்திற்கும் வீரர்களுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) தொடர்பாக மலேசிய சுகாதார அமைச்சகத்துடன் நாங்கள் விவாதித்தோம்.

“பூப்பந்து  விளையாட்டு  ரசிகர்கள் , வரவு குறித்து, நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம், இந்த போட்டி ஒரு பெரிய இடத்தில் நடைபெறுவதால், MOH அதை பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :