ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

போலி தடுப்பூசி சான்றிதழ் விநியோகம்-  மருத்துவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

 ஆலம், ஜன 29- போலியான கோவிட்-19 இலக்கவியல்களை விற்கும் தனியார் மருத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு  மிகக் கடுமையானஜ தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் அரச அலுவலக பேஸ்புக் மூலம் வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பில் கோம்பாக்கில் உள்ள கிளினிக் ஒன்றின் உரிமையாளர் மற்றும் ஆறு உதவியாளர்களை சிலாங்கூர் போலீசார் கைது செய்ததை அறிந்து  தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.

அவர்களின் இந்த நடவடிக்கை பணி நெறி மற்றும் மருத்துவ தொழிலின் மாண்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுல்தான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அராங்கமும் சுகாதார அமைச்சம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இத்தகைய செயல்கள் பாழ்படுத்தி விடுகின்றன என்றார் அவர்.

மலாய் மற்றும் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த இழிவான மற்றும் பாவம் நிறைந்த காரியங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இத்தகைய மோசடிக் செயல்கள் ஒருபுறமும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் தன்மூப்பான நடவடிக்கைள் மறுபுறமும் தொடரும் பட்சத்தில் கடந்த ஈராண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து பல லட்சம் உயிர்களைப் பறித்த கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எப்போதுதான் முடிவு கட்டுவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.


Pengarang :