MEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

2,719 கிலோ குப்பைகளை டீம் சிலாங்கூர் அகற்றியது

ஷா ஆலம், ஜன 30- தன்னார்வலர் அமைப்பான டீம் சிலாங்கூர் கடந்தாண்டு 14 பகுதிகளிலிருந்து 2,719 கிலோ குப்பைகளை அகற்றியது.

சேகரிக்கப்பட்ட குப்பைகளில் நெகிழிப் பைகள், காகிதங்கள், கண்ணாடிப் பொருள்கள், அலுமினியம் ஆகியவையும் அடங்கும் என்று டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாஹைசெல் கெமான் கூறினார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த குப்பை சேகரிப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதி வரை இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கண்ட இடங்களில் வீசப்பட்ட 188 பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களையும் நாங்கள் அப்புறப்படுத்தினோம் என்றார் அவர்.

செமினி, பத்தாங் காலி, கோல குபு பாரு, ஜெராம், குவாங், சுங்கை துவா ஆகிய
பகுதி களை இலக்காகக் கொண்டு 1,112 தன்னார்வலர்களின் உதவியுடன் இத்திட்டம் 
அமலபடுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Pengarang :