ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர், ஜன 31– நாளை சீனப்புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் நாட்டிலுள்ள சில நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராக உள்ளது.

இன்று காலை 11.35 மணி நிலவரப்படி நாட்டின் வட மற்றும் தென் பகுதி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளதாக பிளஸ் மலேசியா நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

நீண்ட விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலோர் கடந்த வெள்ளிக் கிழமையே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டதால் சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்படுவதாக அவர் சொன்னார்.

இதனிடையே, கிழக்கு கரை நெடுஞ்சாலை (எல்.பி.டி.), எல்.பி.டி.2, சுங்கை பீசி டோல் சாவடி, ஸ்கூடாய் டோல் சாவடி ஆகிய பகுதிகளின் இரு வழிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக எல்.எல்.எம். எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது.

கூலாய்-செடேனாக் பகுதியின் வடக்கு தடத்தின் 31 கிலோ மீட்டரில் மரம் விழுந்துள்ளது. எனினும் இதனால் அவசர தடம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என்று அது தெரிவித்தது.


Pengarang :