Pengunjung melakukan aktiviti mendaki di Hutan Pendidikan Bukit Gasing, Petaling Jaya pada 16 Jun 2020 selepas kawasan itu dibuka semula dalam tempoh Perintah Kawalan Pergerakan Pemulihan. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலையேறுவோருக்கு பிப்.5 முதல் அனுமதி

ஷா ஆலம், பிப் 1- சிலாங்கூரிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

பருவமழை காரணமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் கூனோங் நுவாங் பகுதியில் மட்டும் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில வன இலாகா தனது முகநூல் பதிவில் கூறியது.

மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.

சிலாங்கூர் தெங்கா பகுதியைப் பொறுத்தவரை கூனோங் ஹீத்தாம், புக்கிட்
செனுவாங், சுங்கை செப்போ நீர் வீழ்ச்சி, புக்கிட் சாகா, புக்கி ஆப்பே, புக்கிட் புரோகா, புக்கிட் கெம்பாரா,உலு பெர்டிக் நீர்வீழ்ச்சி, சுங்கை பீசாங் நீர்வீழ்ச்சி, சோப்பியா ஜீன் நீர் வீழ்ச்சி, லூபோக் தூடோங் நீர் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

உலு சிலாங்கூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கூனோங் உலு செமாங்கோ, புக்கிட் சொரோக்கோ, புக்கிட் கூட்டு, லதா மேடாங் நீர் வீழ்ச்சி, லதா மக்காவ் நீர் வீழ்ச்சி, செதிங்கி நீர்வீழ்ச்சி, லுபோக் காவா நீர் வீழ்ச்சி ஆகியவை மலையேறும் நடவடிக்கைகளுக்கு அறுமதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இப்பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் தேதி தொடங்கி மலையேறும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

Pengarang :