ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசாரின் சீனப்புத்தாண்டு வாழ்த்து

ஷா ஆலம், பிப் 1– சீனப்புத்தாண்டின் போது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரை ஒன்றாக சந்திப்பது சீன சமூகத்திற்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயமாகும்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த பாரம்பரியத்தை கடந்த ஈராண்டுகளாக கடைபிடிக்காமல் இருந்தவர்களுக்கு இவ்வாண்டு புத்தாண்டு மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாக விளங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காரணத்தால் கடந்தாண்டு சீனப்புத்தாண்டை முழு பாரம்பரியத்துடன் கொண்டாட முடியாமல் போனது. இவ்வாண்டு இப்பெருநாள் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக விளங்கும் என்பது திண்ணம் என்று அவர்  சொன்னார்.

இன்னும் சில எஸ்.ஒ.பி. நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருந்தாலும் சீனப்புத்தாண்டின் போது பெற்றோர்களின் வீடுகளுக்குச் செல்ல வழங்கப்பட்ட அனுமதி சீன சமூகத்திற்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டிலுள்ள குறிப்பாக சிலாங்கூரில் இருக்கும் சீன சமூகத்தினருக்கு 2022 ஆம் ஆண்டு சீனப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்க க் கூடியதாக விளங்குவது திண்ணம். கடந்தாண்டு காணப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த விழாவைக் சிறப்பாக கொண்டாடுவதற்குரிய வாய்ப்பு கிட்டவில்லை என்றார் அவர்.

சீனப்புத்தாண்டின் போது குடும்பத்தினரையும் பெற்றோரையும் சந்திப்பது கன்பூஷியஸ் போதனையில் முக்கியமான அங்கமாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :