ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

போலி தடுப்பூசி சான்றிதழ் விற்பனை- மருத்துவர்களை கருப்பு பட்டியலிட சிலாங்கூர் அரசு கோரிக்கை

ஷா ஆலம், பிப் 4- போலி தடுப்பூசி சான்றிதழை விற்பனை செய்யும் மருத்துவர்களை கருப்பு பட்டியலிடும்படி சுகாதார அமைச்சை சிலாங்கூர் அரசு வலியுறுத்தியுள்ளது.

தற்போது சுமார் 5,000 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஏமாற்றியது நாட்டில் தொற்று நோயை பரப்ப சதி செய்தது ஆகிய குற்றங்களின் பேரில் அவர்கள் குற்றஞ்சாட்டப்படவும் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

துரதிர்ஷ்டசமாக இச்சம்பவம் சிலாங்கூரில் நிகழ்ந்துள்ளது. தொடக்கத்தில் திரங்கானுவில் இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்த போதிலும் அங்கு கைப்பற்றப்பட்ட மடிக்கணினியை சோதனையிட்ட போது சிலாங்கூரில் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமான முறையில் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றது அம்பலத்திற்கு வந்தது என்றார் அவர்.

அவர்கள் உண்மையில் தடுப்பூசி பெற்றார்களா அல்லது தடுப்பூசி பெறாமலேயே மைசெஜாத்ரா செயலியை புதுப்பித்துக் கொண்டார்களா எனபதைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள பொருளாதார நடவடிக்கை மன்ற கூட்ட அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

போலி தடுப்பூசி சான்றிதழ் விற்பனைக் கும்பலின் வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று மலேசியர்களை குறிப்பாக சிலாங்கூர்வாசிகளை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :