ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஏப்ரல் மாதம் அதிகபட்ச மழையை சிலாங்கூர் பதிவு செய்யும்- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

ஷா ஆலம், பிப் 4– வரும் ஏப்ரல் மாதம் அதிகப் பட்ச மழையை சிலாங்கூர் மாநிலம் பதிவு செய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. அம்மாதத்தில் மழையின் அளவு 230 முதல் 350 மில்லி மீட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் மிதமான அளவில் அதாவது 200 முதல் 300 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவு இருக்கும்.

அதே சமயம், பிப்ரவரி, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்  மழையின் அளவு 110 முதல் 250 மில்லி மீட்டர் வரை பதிவாகும் என்பதை வானிலை ஆய்வுத்துறை மேற்கொண்ட பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான நீண்ட கால வானிலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரும் மே மாதம் ஏற்பட்டக்கூடிய தென் மேற்கு பருவமழை காரணமாக தீபகற்ப மலேசியாவின் பல மாநிலங்களில் 100 முதல் 350 மில்லி மீட்டர்  வரை மழை பெய்யும். மலாக்கா, பகாங் (பெக்கான்,ரொம்பின்) மற்றும் ஜொகூரில் மழையின் அளவு 50 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை இருக்கும்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்களில் 100 முதல் 300 மில்லி மீட்டர்  மழை பெய்யும் என அத்துறை கணித்துள்ளது.


Pengarang :