ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

உதவி நிதி பகிர்ந்தளிப்பை விரைவுபடுத்த கிள்ளான், பெட்டாலிங்கில் கூடுதல் பணியாளர்கள்

 ஷா ஆலம், பிப் 5- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் விரைந்து நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்ட அலுவலகங்களில் கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடன் ஷாரி கூறினார்.

இதர மாவட்டங்களில் 1,000 வெள்ளி நிதியை பகிர்ந்தளிக்கும் பணி ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதால் அங்குள்ள ஊழியர்களைத் தாங்கள் தருவிக்கவுள்ளதாக அவர் சொன்னார.

கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்தில் மட்டுமே நிதி வழங்கும் பணி எஞ்சியுள்ளது. இதர மாவட்டங்களில் தலா 1,000 பேருக்கு மட்டுமே நிதி வழங்க 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆகவே, மற்ற மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீட்டுக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பணி இம்மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் நிதி விண்ணப்பத்தில் மோசடி நிகழ்ந்துள்ளதை தமது தரப்பு கண்டறிந்துள்ளதாகவும் அமிருடின் சொன்னார்.

ஒரே குடும்பத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றை உடனே அங்கீகரிக்காமல் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.உதவி நிதி பகிர்ந்தளிப்பை விரைவுபடுத்த கிள்ளான், பெட்டாலிங்கில் கூடுதல் பணியாளர்கள் 






Pengarang :