ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஓப்ஸ் செலாமாட் 17- சிலாங்கூரில் 2,810 விபத்துகள், 21 மரணங்கள் பதிவு

ஷா ஆலம், பிப் 8- ஓப்ஸ் செலாமாட் 17 சாலை பாதுகாப்பு இயக்க அமலாக்க காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் 2,810 சாலை விபத்துகள் பதவு செய்யப்பட்டன.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு  கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை இந்த சாலை பாதுகாப்பு இயக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது.

கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் செலாமாட் 16 இயக்கத்தின் போது பதிவான 4,184 சாலை  விபத்துகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 1,374 சம்பவங்கள் அல்லது 32.8 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

சிலாங்கூரில் பதிவான 2,810 விபத்துகளில் 1,629 நகர சாலைகளிலும் 404 நெடுஞ்சாலைகளிலும் 362 மாநிலச் சாலைகளிலும் 219 கூட்டரசு சாலைகளிலும் எஞ்சியவை இதர சாலைகளிலும் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

இந்த ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்க அமலாக்க காலத்தில் 21 பேர் மரணமுற்றதாக கூறிய அவர், அவர்களில் 19 பேர் மோட்டார் சைக்கிளோட்டிகள் என்றார்.

இக்காலக்கட்டத்தில் அதி வேகத்தில் வாகனத்தை செலுத்தியது, சமிக்ஞை விளக்கை மீறிச் சென்றது, வாகனம் ஒட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்தியது, வரிசையை முந்திச் சென்றது, இரட்டைக் கோடுகளில் வானங்களை முந்திச் சென்றது, அவசர தடத்தில் வாகனத்தை செலுத்தியது ஆகிய குற்றங்களுக்காக 34,329 பேருக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :