ECONOMYMEDIA STATEMENTSELANGOR

6,709 வணிகர்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு ஹிஜ்ரா அறவாரியம் உதவி

ஷா ஆலம், பிப் 9– கடந்தாண்டில் 7,709 வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் உதவி புரிந்துள்ளது.

இந்த கடனுதவித் திட்டம் 8 கோடியே 70 லட்சம் வெள்ளியை உள்ளடக்கியுள்ளதாக ஹிஜ்ரா அறவாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுப்பாராடி முகமது நோர் கூறினார்.

வர்த்தம், உற்பத்தி, உணவு வியாபாரம், சேவை மற்றும் சில்லறை வியாபாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த கடனுதவித் திட்டம் மூலம் பயன் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று, வேலையிழப்பு மற்றும் வணிகர்களின் எண்ணிக்கை உயர்வு ஆகிய காரணங்களால் கடந்தாண்டில் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் 8 கோடியே 10 லட்சம் பேருக்கு கடன் வழங்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் அத்தொகை 8 கோடியே 80 லட்சமாக உயர்வு கண்டது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த ஹிஜ்ரா அறவாரியம் ஆரம்பிக்கப்பட்ட 7 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக 58,000 தொழில்முனைவோர் மூலம் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக அவர் கூறினார்.

ஹிஜ்ரா ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் வகையில் 10 கோடி வெள்ளி சுழல் நிதியில் மைக்ரோ கிரடிட் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்தது.


Pengarang :