ECONOMYMEDIA STATEMENTSELANGOR

8.2 கோடி வெள்ளி கடன் தொகையை ஹிஜ்ரா அறவாரியம் வசூலித்தது

ஷா ஆலம், பிப் 9– யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் கடந்தாண்டில் 8 கோடியே 20 லட்சம் வெள்ளி கடன் தொகையை திரும்ப வசூலித்தது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 7 கோடியே 90 லட்சம் வெள்ளியை விட அதிகமான தொகையை அந்த அறவாரியம் வசூலித்துள்ளதை இது காட்டுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும் பெற்றக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் வணிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதை இது காட்டுகிறது என்று யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முகமது சுப்பராடி முகமது நோர் கூறினார்.

மற்ற தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்குவதற்கு ஏதுவாக கடன் பெற்றவர்கள் அதனை முறையாக திரும்பச் செலுத்துவது அவசியம் என்று நேற்று மூன்று ஹிஜ்ரா தொழில்முனைவோரை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடனைத் திரும்பச் செலுத்த இயலாத அல்லது வர்த்தக நடவடிக்கைள் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடன் மீட்சித் திட்டத்தை தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இத்தகைய தரப்பினரை சந்திக்கும்படி ஹிஜிரா பணியாளர்களுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதோடு அவர்கள் புதிய வர்த்தகத்தை தொடங்குவதற்கு ஏதுவாக நிதியுதவி வழங்கப்படியும் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடனைத் திரும்பச் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள வணிகர்களுக்கு உதவும் நோக்கிலான இந்த கடன் மீட்சித் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :