ECONOMYMEDIA STATEMENTSELANGOR

உரிமையியல் வர்த்தகத்தில் பி40 மற்றும் பி50 தரப்பினர் ஈடுபட வேண்டும்- ரோட்சியா வலியுறுத்து

ஷா ஆலம், பிப் 10- மாநிலத்திலுள்ள அதிகமான குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பி50 தரப்பினர் பிரான்சாய்ஸ் எனப்படும் உரிமையியல் வர்த்தகத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க முடியும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

நேர்த்தியான பொருள் விநியோக முறை, உயர் தரத்திலான நிர்வாகம், அறிவாற்றல் மாற்றத்தின் வாயிலாக உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, பயனீட்டாளர்களின் தேவையை நிறைவு செய்யும் திறன் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக இந்த பிரான்சாய்ஸ் முறை விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

அண்மையில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான மைக்ரோ பிரான்சாய்ஸ் பயணம் மற்றும் கொள்திறன் திட்டத்தை (ஜெலாஜா எப்3எம் பயணம்) தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த எப்3எம் பயணத் திட்டத்தை மலேசிய பிரான்சாய்ஸ் சங்கம் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சுடன் இணைந்து நடத்துகிறது.

இந்த எப்3எம் திட்டத்தின் மூலம் மானியம் வழங்குவதன் வழி சிலாங்கூரில் அதிகமானோர் உரிமையியல் கிளை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ரோட்சியா சொன்னார்.


Pengarang :