ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பெருதொற்று அதிகரிப்பு- ஜோகூர் மாநிலத் தேர்தலை ஒத்தி வைக்க பக்கத்தான் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 10– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 17,000 த்தை தாண்டியதை கருத்தில் கொண்டு ஜோகூர் மாநிலத் தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கும்படி அரசாங்கத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.

உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் நோய்த் தொற்றின் அலை தீவிரமடைந்து நோய்த் தொற்று எண்ணிக்கையும் நேற்று 17,000 ஆக உயர்வு கண்டதை  தாங்கள் கடுமையாக கருதுவதாக பக்கத்தான் தலைவர் மன்றம் கூறியது.

இந்த நோய் தொற்று பரவல் அரசியல் நோக்கத்திற்கு ஆயுதமாக பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்ய ஜோகூர் மாநிலத் தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று பக்கத்தான் தலைவர் மன்றம் இன்று அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டது.

தேர்தலை ஒத்தி வைக்க மறுத்து மேற்கத்திய நாடுகளைப் போல் தளர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வந்தால் பரப்புரைகள் உள்ளிட்ட திறந்த வெளி பிரசார நடவடிக்கைகளுக்கும் அது அனுமதியளிக்க வேண்டும் என்றும்  அவ்வறிக்கை வலியுறுத்தியது.

முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை இனியும் அமல்படுத்த முடியாது. காரணம், இத்தகைய முடிவு இதற்கு முன்னர் தோல்வியில் முடிந்தது நிரூபணமாகியுள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

 


Pengarang :