ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி தடுப்பூசி சான்றிதழ் விற்பனை- 25 பேர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், பிப் 10– போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அரச மலேசிய போலீஸ் படை 25 பேரை கைது செய்துள்ளது.

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட ஒன்பது போலி தடுப்பூசி சான்றிதழ் விற்பனை சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று மருத்துவர்கள், மூன்று தாதியர், எழு முகவர்கள், ஒரு கிளினிக் பணியாளர், 11 பொதுமக்கள் ஆகியோரும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

ஆகக்கடைசியாக சபாவில் இத்தகைய தடுப்பூசி சான்றிதழ் மோசடி நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கினாருட் பகுதியிலுள்ள கிளினிக் ஒன்றின் டாக்டர் இந்த தடுப்பூசி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் அந்த கிளினிக்கின் பணியாளர் போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் சொன்னார்.

இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணை முற்றுப் பெற்றுவிட்டது. மேல் நடவடிக்கைக்காக அந்த அறிக்கையை சட்டத் துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பவிருக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :