ECONOMYMEDIA STATEMENTNATIONAL

RM 710,000 இழப்பு, கோவிட்-19 சோதனைக் கருவியை விற்கும் வித்தையில் வர்த்தகர் ஏமாற்றப்பட்டார்.

கோலாலம்பூர், 10 பிப் : இல்லாத கோவிட்-19 சோதனைக் கருவியை விற்பதற்கான மோசடியால்  RM710,000 இழப்பு ஏற்பட்டதாக மலேசிய காவல்துறைக்கு சிலாங்கூரில் இருந்து (PDRM) இரண்டு புகார்கள் வந்துள்ளன.

புக்கிட் அமான், வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ முகமது கமாருடின் கூறுகையில், கடந்த ஜனவரியில் இரண்டு தொழிலதிபர்களால் இந்த  மோசடி புகார் செய்யப்பட்டதாகவும், இதற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்க படுவதாகவும் கூறினார்.

விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இருவரும் சீனாவில் உள்ள ஒரு உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கோவிட்-19 சோதனைக் கருவியை வாங்குவதற்கு உதவ முடியும் என்று கூறிய ஒரு நிறுவனத்துடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கப்பல் செலவுகள் உட்பட 100,000 சோதனைக் கருவிகளுக்கு RM600,000 செலுத்தியதாக தெரிவித்தார்.

பணம் செலுத்தப்பட்ட பிறகு, சோதனைக் கருவி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் பின்னர் சீனாவில் உள்ள உற்பத்தியாளரிடம் சரிபார்த்தபோது, ​​உற்பத்தியாளர் எந்த ஆடரையும் பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று அவர் இன்று மெனாரா கேபிஜேயில் ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இது போன்ற மோசடிகளை தவிர்க்க மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை செய்வதற்கு முன் சகல விவரங்களையும்  சரிபார்க்கவும், குறிப்பாக பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக இருக்குமாறு முகமது கமருடின் வர்த்தகர்கள் நினைவூட்டினார்.

இதற்கிடையில், ‘அண்ட்ராய்டு பேக்கேச் கிட்’ (ஏ.பி.கே) கோப்பு பதிவிறக்கம் செய்ததன் மூலம் வங்கி கணக்கை ஹேக்கிங் செய்யும் கும்பல்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்டறிந்து உள்ளதாகவும், RM58,844 இழப்பு தொடர்பான ஐந்து பதிவுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.*


Pengarang :