ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹரப்பான் கட்சியின் கட்சித்தாவல் எதிர்ப்பு மசோதா மார்ச் 24க்கு முன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்

கோலாலம்பூர், பிப் 10: பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப,  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி (MoU) கட்சித் தாவல் தடை மசோதா கொண்டுவரப்பட்ட வேண்டும்.

ஹரப்பான் தலைமைத்துவ கவுன்சில் இன்று ஒரு கூட்டறிக்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 2.4 வது பிரிவையும் குறிப்பிட்டுள்ளது, இந்த மசோதா பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில்,  அதாவது மார்ச் 24 கு அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்க வேண்டும்.

பிகேஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் கினாபாலு ஐக்கிய முற்போக்கு அமைப்பின் (யுபிகேஓ) தலைவர் டத்தோ ஸ்ரீ வில்பிரட் மேடியஸ் டாங்காவ் ஆகியோர் இன்று கூட்டறிக்கை வெளியிட்டனர்.

நேற்றைய தலைமைத்துவ கவுன்சில் வழக்கமான கூட்டத்தின் படி, ஜோகூர் தேர்தல்  வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர், போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளர்களின் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணங்களை நடத்த முடிவு செய்தது.

“இது நிலையான ஒரு ஜோகூர் மாநில அரசாங்கத்தை உருவாக்க நோக்கம் கொண்டதாகும்.  மேலும் தொற்று நோய்க்கு பிறகு ஜோகூர் மாநிலத்தை அபிவிருத்திக்கு உகந்த முறையில் தயார் படுத்த வேண்டிய தேவையை உணர்த்துகிறது என்றது.

இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன் பொருளாதார வளர்ச்சி, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் சீர்திருத்தம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ‘ஜோகூர் பாங்கிட், மாஜு, பெர்மாருவா’ பிரச்சாரத்தின் கீழ் ஹராப்பான் தொடர் போராட்ட கொள்கையை தயாரிக்கவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மாற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை கருதி கடந்த 13 செப்டம்பர் 2021 அன்று அரசாங்கத்திற்கும் ஹராப்பானுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், அத்துடன், கோவிட்-19 மீட்புத் திட்டம், நிர்வாகம், நாடாளுமன்ற சீர்திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம்,  எம்ஏ63  மலேசியா ஒப்பந்தம்  வழிநடத்தல் குழுவை நிறுவுதல் போன்ற சவால்களை சமாளிப்பது என்றது அது.


Pengarang :