ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

ஶ்ரீ செத்தியா தொகுதியின் 1000 மேற்பட்ட மாணவர்கள்  பள்ளி பொருட்கள் உதவியைப் பெற்றனர்

ஷா ஆலம்,  பிப் 11: ஶ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியை சுற்றியுள்ள குறைந்த வருமானம் கொண்ட (பி40)  வருமான பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த 1,031 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வோம் திட்டத்தின் மூலம் உதவி பெற்றனர்.

சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு அல்லது எம்.பி.ஐ,  கே.டி.இ.பி கழிவு மேலாண்மை மற்றும் மைடின் பேரங்காடி ஆகியவற்றின் ஒத்துழைப்பில் RM 100 மதிப்புள்ள பைகள், சீருடைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற பள்ளிப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

மாநில அரசின் வருடாந்திர ஒதுக்கீட்டில் இருந்து இந்த உதவி ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினருக்கும்  வழங்கப்படும்,. எனவே  வரும் ஆண்டுகளில் இந்த உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு தொடரும்.

நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக  அதிகமான மக்கள் ஒரு இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டியுள்ளது. இருப்பினும்  கட்டம் கட்டமாக ஒவ்வொரு வாரமும் ஏழு ஶ்ரீ செத்தியா மாநகர் மன்ற உறுப்பினர்கள் பகுதிகள் வாரியாக ஶ்ரீ செத்தியா தொகுதி முழுவதும் தொடரும் என்று சட்டமன்ற உறுப்பினரான  ஹலீமி அபு பக்கர்  சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹலீமி பகிர்ந்த வீடியோவில், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கொடை பெறுபவர்களாக தேர்ந்தெடுத்ததற்கு மாநில அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

பிப்ரவரி 8 அன்று, கே.டி.இ.பி கழிவு மேலாண்மையின் நன்கொடையால் அப்பகுதியில் உள்ள மொத்தம் 100 மாணவர்களுக்கும் அதே உதவி வழங்கப்பட்டது.


Pengarang :