ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சாப் கோ மேக்கு ஹேப்பி பூம் மற்றும் பாப் பாப் பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது

கோலாலம்பூர்,பிப் 12:  வரும் செவ்வாய்கிழமை சாப் கோ மே கொண்டாடத்திற்கு ஹேப்பி பூம் மற்றும் பாப் பாப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய மலேசிய போலீஸ் படை (பிடிஆர்எம்) அனுமதிக்கிறது.

இது குறித்து புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் கூறுகையில், குறிப்பிடப்பட்ட பட்டாசுகளில் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எரிபொருளைக் கொண்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், இரண்டு பட்டாசு தயாரிப்புகளின் விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் சாப் கோ மே விழா உட்பட, எந்தப் பண்டிகையின் போதும் பட்டாசுகளை சொந்தமாக வைத்திருக்க, விற்க, வாங்க மற்றும் விளையாடுவதற்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதை பிடிஆர்எம் மக்களுக்கு நினைவூட்டுகிறது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, அனுமதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறு பட்டாசுகளை வைத்திருப்பது, விற்பது, வாங்குவது அல்லது விளையாடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வெடிபொருள் சட்டம் 1957 (சட்டம் 207) பிரிவு 7 மற்றும் 8ன் கீழ் வழக்குத் தொடரலாம்.

சிறு குற்றச் சட்டம் 1955ன் பிரிவு 3 (5)ன் படி,பட்டாசுகளை விளையாடுபவர்களுக்கு அல்லது வெடிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு சிறைத்தண்டனை அல்லது 100 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அப்துல் ஜலீல் கூறினார். -பெர்னாமா


Pengarang :