ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஜனவரி, பிப்ரவரி மாதம் பிறந்த மூத்த குடிமக்களுக்கு வெ. 100 பற்றுச் சீட்டு- கின்ராரா தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், பிப் 13- ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிறந்த கின்ராரா தொகுதியிலுள்ள முதியோர்களுக்கு மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் கீழ் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு வழங்கப்படுகிறது.

தகுதி உள்ள மூத்த குடிமக்கள் வரும் திங்கள்கிழமை முதல் இம்மாதம் 28 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் தொகுதி சேவை மையத்தில் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிறந்த முதியவர்கள் இலவச பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேல் விபரங்களுக்கு 03-80821661 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் இதுவரை எந்த உதவியும் பெறாதவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

 


Pengarang :