ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரிலுள்ள 56 தொகுதிகளிலும் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம்-மார்ச் மாதம் தொடங்கும்

பெட்டாலிங் ஜெயா, பிப் 13- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் வரும் மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

பொது மக்களிடம் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை இந்த பரிசோதனை இயக்கம் வழங்கும் என்று அவர் சொன்னார்.

நான்கு விதமான புற்று நோய் பரிசோதனைகளை மேற்கொள்வதை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளது. இச்சோதனைகள் யாவும் இலவச பரிசோதனை இயக்க மையங்களிலே நடத்தப்படும். 

யாரேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் சிகிச்சைக்கு பதிலாக முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மக்கள் உடலாரோக்கியம் மீது மாநில அரசு கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை அமைக்கிறது என்றார் அவர்.

இங்குள்ள டாமன்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் கர்ப்பப்பை வாயில் புற்று நோய் பரிசோதனை இயக்கத்தின் போது  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :