ECONOMYHEALTHMEDIA STATEMENTPENDIDIKAN

கிட்டத்தட்ட 170,000 சிறார்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர்,பிப் 14: நாட்டில் நேற்று சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களில் 169,710 பேர் அல்லது 4.8 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (பிக்கிட்ஸ்) தொடங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையே எட்டு வார இடைவெளியை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இதற்கிடையில், கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில்,நாட்டில் நேற்றுவரை மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 58 ஆயிரத்து 893 பேர் அல்லது 56.4 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 644 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர், மேலும் 2 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 859 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் தடுப்பூசியின் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதுவரை, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 27 லட்சத்து 95 ஆயிரத்து 507 பேர் அல்லது 89.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 28 லட்சத்து 74 ஆயிரத்து 510 பேர் அல்லது 92.3 விழுக்காட்டினர்  குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

நேற்று 118,875 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதில்  35,441 முதல் டோஸ் தடுப்பூசியையும், 649 இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் மற்றும் 82,785 ஊக்க தடுப்பூசியையும் பெற்றனர், இது பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 50 லட்சத்து 42 ஆயிரத்து 686 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, சுகாதார அமைச்சின் கிட்ஹப் அகப்பக்கம் படி, கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக 11 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெர்னாமா


Pengarang :