KUALA LUMPUR, 25 Mac — Seorang pelajar Sekolah Victoria Institution mengaminkan bacaan doa kesyukuran setelah selesai menjawab kertas soalan Sains Komputer pada peperiksaan Sijil Pelajaran Malaysia (SPM) Tahun 2020 hari ini.? –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஜி.பி.எம்.எஸ் எம்.பி.ஐ உடன் இணைந்து மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை விநியோகம் செய்கிறது

ஷா ஆலம்,பிப் 15: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு வாடிக்கையாளர் அடையாளத் (சிம்) அட்டைகளை விநியோகிப்பதற்காக தீபகற்ப மலாய் மாணவர் கூட்டமைப்பு (ஜிபிஎம்எஸ்) நியமிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச இணைய தரவு கூடிய 3,000 சிம் கார்டுகளை சங்கம் விநியோகிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் நிறுவனம்  அல்லது எம்பிஐ தெரிவித்துள்ளது. “சிலாங்கூருக்கு வெளியே உள்ள மாணவர்கள் தகுதியிருந்தால் ஒரு வருடத்திற்கு இலவச இணையச் சந்தாவைப் பெறலாம்” என்று அதன் நிறுவன சமூகப் பொறுப்புத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

கடந்த ஜனவரியில், சிலாங்கூர் பல்கலைக்கழகம் மற்றும் சிலாங்கூர் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமையுடன் மொத்தம் 3,000 சிம் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 70,000 பேருக்கு 12 மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவை வழங்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்ட மாணவர்களைத் தவிர, சிலாங்கூர் அறக்கட்டளை கடன் வாங்குபவர்கள், சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மைய மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்கும் இந்த முயற்சி பயனளிக்கிறது.


Pengarang :