ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான மோடேர்னா மலேசியாவில் துணை நிறுவனத்தை அமைக்கிறது.

கோலாலம்பூர், பிப் 16– எம்.ஆர்.என்.ஏ. சிகிச்சை மற்றும் தடுப்பூசியில் முன்னோடியாக விளங்கும் மோடேர்னா இன்காப்ரேட்டட் நிறுவனம் தைவான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுடன் கூடுதலாக மலேசியாவிலும் துணை நிறுவனத்தை அமைக்கவுள்ளது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தனது வருகையை நிலைப்படுத்தும் விதமாக மோடேர்னா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு விளங்குகிறது. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் இந்நடவடிக்கை நீண்ட கால வியூகம் மற்றும் வர்த்தக தொலைநோக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்த துணை நிறுவனத்தை அமைப்பதன் வாயிலாக மலேசிய மக்களுக்கு எம்.ஆர்.என்.ஏ. தீர்வுகளை மலேசியர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று மோடேர்னா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஸ்டீபன் பென்செல் அறிக்கை ஒன்றில் கூறினார்.

மலேசியா மருந்தியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி கண்டு வரும் முக்கிய நாடாக விளங்குகிறது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் மோடேர்னா தடம் பதிப்பதன் மூலம் உள்நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

எங்களின் எம்.ஆர்.என்.ஏ. தளம் வழங்கக்கூடிய வாய்ப்புகளை இப்பிராந்தியத்திற்கு அளிக்கக்கூடிய வலுவான குழுவை உருவாக்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் மருந்தியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் துறை கண்டு வரும் வளர்ச்சி மீது மோடேர்னா நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கையை இங்கு துணை நிறுவனத்தை அமைக்கும் அதன் முடிவு புலப்படுத்துகிறது.


Pengarang :