ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

6.4 மில்லியன் தடுப்பூசிகளை மலேசியாவிற்கு அனுப்பும் உறுதிமொழியை அஸ்ட்ராஸேனேகா நிறைவேற்றியுள்ளது

கோலாலம்பூர், பிப் 16: அஸ்ட்ராஸேனேகா இன்று மலேசியாவிற்கு 1,365,200 டோஸ் கோவிட் தடுப்பூசியை (ChAdOx1-S [Recombinant]) அனுப்பியது.  இது மலேசிய அரசாங்கத்தின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் 64 லட்சம் டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது.

இன்றுவரை, 92 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகள் மலேசியாவிற்கு நேரடி விநியோகம் செய்யப்பட்டது. கோவாக்ஸ் மற்றும் பிற நாடுகளின் நன்கொடைகள் மூலம் நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவாக அனுப்பப்பட்டுள்ளது என்று மலேசியாவுக்கான அஸ்ட்ராஸேனேகாவின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் பஞ்சால் கூறினார்.

மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைக் குறைக்கும் மற்றும் உயிரைக் காப்பாற்றும் தடுப்பூசி  வழங்குவதில் அஸ்ட்ராஸேனேகா தனது பங்கிற்கு உறுதிபூண்டுள்ளது. ஒமிக்ரோனின் தோற்றம் மற்றும் அந்த நோய்க்கிருமியல் ஏற்படும் ஆற்றல்மிக்க சவால்களைக் கருத்தில் கொண்டு, தொற்றுநோயிக்கு எதிராக அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து முழு ஆதரவு அளிப்போம்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அஸ்ட்ராஸேனேகா 170 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 250 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, அதில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. -பெர்னாமா


Pengarang :