ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் வரி வசூல் 8.1 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

ஷா ஆலம், பிப் 17- கோல லங்காட் நகராண்மைக் கழகம் கடந்தாண்டு 8 கோடியே 14 லட்சம் வெள்ளி வரியை வசூல் செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 98 லட்சம் வெள்ளியாக இருந்தது.

சிறப்பான, பொறுப்புணர்வுமிக்க மற்றும் கட்டொழுங்கான நிர்வாக முறையின் காரணமாக இந்த வரி வசூலிப்பு அதிகரித்துள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

கோல லங்காட் நகராண்மைக்கழகம் அமல்படுத்தி வரும் நிர்வாக முறை, செலவின மதிப்பீட்டு அடிப்படையில் நிதர்சனமானது. சமசீரான வரவு செலவுத் திட்டத்தை நகராண்மைக் கழகம் கடந்த 13 ஆண்டுகளாக தொடந்து நிலை நிறுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

இந்த சிறப்பான அடைவு நிலையை கோல லங்காட் நகராண்மைக் கழகம் 2022 ஆம் ஆண்டிலும் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள மாஸா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் நகராண்மைக் கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 35 பணியாளர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த பணியாளர் விருதைப் பெற்றனர்.

அரசாங்கத்தின் இலக்கவியல்மயத் திட்டத்திற்கேற்ப கோல லங்காட் நகராண்மைக் கழகமும் பல்வேறு சேவைகளை இணையம் வாயிலாக வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

 


Pengarang :