ECONOMYHEALTHNATIONALPBT

2பி பிரிவு கோவிட்-19 நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு சி.ஐ.சி மையம் செல்ல வேண்டும்

ஷா ஆலம், பிப் 19 –  2பி பிரிவில் உள்ள (மிதமான அறிகுறிகள் மற்றும் அதற்கு மேல்) கோவிட்-19 நோயாளிகள் மேல் பரிசோதனைக்காக அருகில் உள்ள மதிப்பீட்டு மையம் (சி ஏ.சி.) அல்லது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்,  கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்  தடுப்பூசிகளை அறவே அல்லது முழுமையாகப் பெறாதவர்கள்  மற்றும் கர்ப்பமாக இருக்கும் நோயாளிகளுக்கும் இதே அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
நோய்க்கான அறிகுறிகள் மோசமடைந்தால் தயவுசெய்து 999  என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது  சொந்த வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை  தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
பிரிவு 1 (அறிகுறிகள் இல்லாத) மற்றும் பிரிவு  2  தரப்பினர், (லேசான அறிகுறிகள் கொண்ட)  அதிக ஆபத்து இல்லாதவர்கள், 60 வயதுக்கும் குறைவான மற்றும் கடும் நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் கோவிட்-19 மதிப்பீட்டு மையம் செல்ல வேண்டிய அவசியமில்லை என அத்துறை கூறியது மாறாக, அவர்கள் மைசெஜாத்ரா செயலியில் உள்ள  மூலம் வீட்டிலிருந்து  சுயமதிப்பீடு செய்யும் கருவி மூலம் உடல் நிலையை கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Pengarang :