ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்  கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 27,808 ஆக உயர்வு கண்டது

கோலாலம்பூர், பிப் 19-  நாட்டில் நேற்று கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை 27,808 ஆக உயர்வு கண்டது. இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 66 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நோய்த் தொற்று கண்டவர்களில் 27,705 பேர் அல்லது  99.63 விழுக்காட்டினர்  ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும்  எஞ்சிய 103 பேர் அல்லது 0.37 விழுக்காட்டினர் மூன்றாம் நானகாம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எதிர் நோக்கியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாகடர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்றையத் தொற்றுகளில் 27,689 உள்நாட்டினர் மூலம் பரவிய வேளையில் எஞ்சிய 119 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோவிட்19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 12,488 பேர் குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 682 அதிகரித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 235  பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 132 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட  16 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது.

Pengarang :