ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுற்றுச்சூழலை மாசுபடுத்திய கிள்ளானிலுள்ள 36 தொழிற்துறை வளாகங்களுக்கு RM414,000 க்கு அபராதம் 

ஷா ஆலம், பிப் 20: சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 மற்றும் அதன்  விதிமுறைகளுக்கு இணங்க  207 தவறுகளுக்கு  36 தொழில் துறைகளுக்கு RM414,000 மதிப்புள்ள அபராதத்தைச்  சிலாங்கூர் மாநிலச் சுற்றுச்சூழல் துறை (JAS) வெளியிட்டது.

கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு ஓப் கும்போர்  நடவடிக்கையின் வழி,  வடக்கு கிள்ளான் தொழில்துறை பகுதியில் உள்ள 54 வளாகங்களை ஆய்வு செய்த 34 அமலாக்க அதிகாரிகளால் இது  மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கடுமையான குற்றங்களைச் செய்த இரண்டு தொழிற்சாலைகள் மீது  செயல் பாடு தடுப்பு சட்டத்தின்  கீழ்ச்  செயல்பாடுகள் நிறுத்தி வைப்பதற்கான ஆணையைப்  பிறப்பித்துள்ளது.

இது  மாசு ஏற்பட்டதற்கான காரணங்களை  கண்டறிந்து, அதனை  நிவார்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட  தொழிற்சாலைகளுக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .  ” என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் மாசுபாடு சம்பந்தப்பட்ட குற்றங்களை JAS சிலாங்கூர் எப்போதும்  மிகக் கடினமாக எடுத்துக்கொள்கிறது.   பொதுமக்கள் சுற்றுச்சூழல் தொடர்பான புகார்களுக்குக்  கட்டணமில்லா லைன் 1-800-88-2727 ஐ அழைக்கலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தொடர்புடைய புகார்களைத் தெரிவிக்க https: // [email protected] என்ற போர்ட்டலுக்கு மின்னஞ்சல் செய்யலாம். ..


Pengarang :