ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி போடப்பட்ட 18 நாட்களுக்குப் பிறகு இளைஞன் இறப்பு குறித்து முழு அறிக்கைக்காகச் சுகாதார அமைச்சு காத்திருக்கிறது

கோலாலம்பூர், பிப் 22: கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற 18 நாட்களுக்குப் பிறகு இறந்ததாகக் கூறப்படும் 13 வயது இளைஞனின் மரணம் குறித்த முழுமையான தடயவியல் மற்றும் நோயியல் அறிக்கையைச் சுகாதார அமைச்சகம் இன்னும் பெறவில்லை.

சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை தற்போது மருத்துவ மற்றும் தடயவியல் குழுவுடன் விசாரணையில் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தனது ட்விட்டரில் கூறினார்.

“எனக்கு இன்னும் முழுத் தடயவியல் மற்றும் நோயியல் அறிக்கை வரவில்லை,” என்று அவர் கூறினார்.

பதின்ம வயதினரின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குச் சுகாதார அமைச்சு தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுமாறு டாக்டர் நோர் ஹிஷாமிடம் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, வாலிபரின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த வாலிபரின் பெற்றோர் கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Pengarang :