ECONOMYPBTSELANGOR

இவ்வாரம் மேலும் 46,617 பேருக்கு வெள்ள நிவாரண நிதி பகிர்ந்தளிக்கப்படும்  

ஷா ஆலம், பிப் 22- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிலாங்கூர் மாநில அரசின் உதவி நிதியைப் பகிர்ந்தளிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கிள்ளான் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 46,617 பேருக்கு இவ்வாரத்திற்குள் 1,000 வெள்ளி உதவி நிதி வழங்கப்படுகிறது.

இந்த நிதி வழங்கும் பணி கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  நடைபெறும் அந்த நிதி வழங்கும் நிகழ்வு முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதில் ஷா ஆலம் மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் பணியாளர்கள் துணை புரிவர் என்று அவர் சொன்னார்.

தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உதவி நிதியைப் பெற்று விடுவர் என எதிர்பார்க்கிறோம். இந்த நிதி பகிர்ந்தளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிறு தொடங்கி வரும் வெள்ளிக் கிழமை வரை மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் பணி இம்மாத இறுதிக்குள் முற்று பெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

வெள்ள உதவி நிதி வழங்கும் இடங்கள் வருமாறு-

20 Feb:  5,002  Penerima

1- Dewan Azalea, Seri Muda Seksyen 25

2- Dewan MBSA Kemuning Utama

 

22 Feb: 10,000 penerima

1- Dewan MBSA Kemuning Utama

2- Dewan Kilat TNB, Jalan Kapar

3- Kompleks Sukan Pandamaran

4- Dewan Sri Kerayong, Kapar

 

23 Feb: 13,996 penerima

1- Dewan MBSA Kemuning Utama

2- Dewan Kilat TNB, Jalan Kapar

3- Kompleks Sukan Pandamaran

4- Dewan Sri Kerayong, Kapar

5- Dewan Serbaguna Pejabat Tanah/Daerah Klang

 

24 Feb: 15,141 penerima

1- Kompleks Sukan Pandamaran

2- Dewan Sri Kerayong, Kapar

3- Dewam MBSA Kemuning Utama

4- Dewan Kilat TNB, Jalan Kapar

5- Dewan Serbaguna Pejabat Tanah/Daerah Klang

 

25 Feb: 2,478 penerima

1- Kompleks Sukan Pandamaran


Pengarang :