ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலாம், பிப் 22: சிலாங்கூர் உட்படத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) கணிப்பின்படி, கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகியவை இதே வானிலையை எதிர்கொள்ளும்.

இதற்கிடையில், கிளாந்தான், திரங்கானு, பகாங் போன்ற மாநிலங்கள், சரவாக்கின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சபாவின் சில இடங்களில் இன்று இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏறக்குறைய மணிக்கு 20 மில்லி மீட்டர் அளவு இடியுடன் கூடிய அடை மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், அல்லது சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 


Pengarang :